ஜோதிகாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்...! காரணம் தெரியுமா?
Netizens are criticizing Jyothika Do you know reason
கடந்த ஆண்டு அஜய்தேவ்கன், ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகா நடித்த இந்தி படமான 'சைத்தான்' வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.மேலும், இப்படத்தை விகாஸ் இயக்கினார்.அப்போது பட வெளியீட்டு விழாவில் ஜோதிகா உரையாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது,"சமீபத்தில் நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன்.
படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தில் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் , மம்மூட்டி போன்ற நடிகர்கள் திரையுலகிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள்.
அதில் நிறைய பேர் திரையுலகில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர் தான் திருப்பி தர நினைக்கிறார்கள் "என்று தெரிவித்தார்.இது தற்போது இணையத்தில் வலம் வருகிறது.
மேலும் நெட்டிசன்கள் ஜோதிகா தெரிவிப்பது தவறு, என்று தெரிவித்து தமிழில் அவர் நடித்து வெளிவந்த படங்களின் poster -களை வெளியிட்டு விமர்சித்து வருகிறார்கள்.
English Summary
Netizens are criticizing Jyothika Do you know reason