விழா இரட்டிப்பு! பிறந்தநாள், நிச்சயதார்த்தம் – நன்றிகள் தெரிவித்த விஷால்
Double celebration Birthday engagement Vishal expresses gratitude
தனது பிறந்தநாளுக்கும், நிச்சயதார்த்தத்திற்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஷால் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டதாவது , “நேற்று என் பிறந்த நாளில் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் என் அன்பு தம்பிகள், தங்கைகள் பல இடங்களில் நற்பணி, சமூக நலத்திட்டங்களில் ஈடுபட்டதற்கு, சாலையோர மக்களுக்கு உணவு வழங்கிய நடிகர் யோகிபாபு மற்றும் குடுபத்தினர்கள், அன்னதானம் வழங்கிய சூப்பர் சுப்புராயன், திலீப் சுப்புராயன் மற்றும் தமிழ் நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை முதலிய இடங்களில் நற்பணி உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும், என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்த திரையுலக நண்பர்கள், அரசியல் தலைவர்கள், ஊடக, பத்திரிகை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிறந்தநாள் மற்றும் வாழ்வின் புதிய அத்தியாயம் ஒரே நாளில் இணைந்த இந்நாள் மறக்க முடியாத நாள் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Double celebration Birthday engagement Vishal expresses gratitude