Fast & Furious-இன் கடைசி பாகம் 'Fast Forever': ரிலீஸ் தேதியை அறிவித்துள்ள Vin Diesel..! - Seithipunal
Seithipunal


Fast & Furious படத்தில் இதுவரை பத்து படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு உலகம் முழுதும் பல்லாயிரம் ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது இந்த பட வரிசையின்  நிறைவாக கடைசி படம், பதினொன்றாவது படத்தின் இரண்டாவது பாகம் 'Fast X Part 2' உருவாகி வருகின்ற நிலையில், இதன் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நடிகர் வின் டீசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்தப் பாதை எளிதாக இருக்கும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், அது நம்முடையது. நம்மை வரையறுத்து, நமது மரபாக மாறிய ஒன்று. மேலும் ஒரு மரபு. என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று குறிப்பிட்டு, இந்த பாகத்தின் பெயர் 'Fast Forever' என குறிப்பிட்டுள்ளதோடு, இந்த படம் மார்ச் 17, 2028 வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார். 


இந்த Fast & Furious முந்தைய பாகமான 'Fast X' 2023-இல் வெளியானது, அதன் அடுத்த பாகமான இந்தப் படம் 2025-இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பல தாமதங்கள் காரணமாக படத்தை 2028-க்கு ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த படத்தின் முந்தைய பாகமான 'Fast X' 2023-இல் வெளியானது. இந்த பாகத்தை  Louis Leterrier இயக்கியிருந்தார். அவர்தான் கடைசி பாகத்தையும் இயக்குகிறார். பாடத்தில், வின் டீசல், டொமினிக் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். 

அதேப்போன்று, 'Fast X' இல் நடித்த மிஷேல் ரோட்ரிக்ஸ், ஜான் சீனா, நதாலி இம்மானுவேல், பிரீ லார்சன், ஜேசன் ஸ்டாதம், ஜேசன் மோமோவா மற்றும் சார்லிஸ் தெரோன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இவர்கள் மற்றும் ட்வைன் ஜான்சன் மற்றும் ஸ்டாதம் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்தப் படத்திற்காக மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vin Diesel has announced the release date for Fast Forever the final installment of Fast & Furious


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->