கடைசி டி20 போட்டி: சொந்த மன்னனிலும் சொதப்பிய சஞ்சு சாம்சன்; அதிரடியாக ஆடி சதமடித்த இஷான் கிஷன் ; 271 ரன்கள் குவித்த இந்தியா..! - Seithipunal
Seithipunal


இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 05 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 04 போட்டிகளில் இந்தியா 04-03 என வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 05-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் சூர்யா குமார் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் கலக்கிரங்கினர். இதில் தனது சொந்த மண்ணில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 06 ரன்னில் அவுட்டாகி 05-வது முறையாகவும் இந்த தொடரில் ஏமாற்றமளித்தார்.

கடந்த 04 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியிலும் சொற்ப ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அபிஷேஷ் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 43 பந்துகளில் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக அணியின் கேப்டன் 30 பந்துகளில் 63 அதிரடியாக ஆடி, 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்டிக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் தூபே (08)  மற்றும் றிங்கு சிங் (07) ஆகியோர் காலத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. 272 என்ற வெற்றி இலக்காக பெரிய மைக்கல்லை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

With Ishan Kishans explosive century India amassed 271 runs in the final T20 match against New Zealand


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->