94-வது வயதில் 61-வது திரைப்படத்தை இயக்கும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்..!
Singeetam Srinivasa Rao is directing a film at the age of 94
இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, லிட்டில் ஜான், மும்பை எக்ஸ்பிரஸ் எனப் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
அத்தோடு, தெலுங்கு சினிமாவிலும் ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளளார். இதுவரை 60 படங்களை இயக்கியுள்ள இவருக்கு தற்போது 94 வயதாகிறது. இந்நிலையில், சிங்கீதம் தனது புதிய படத்தை விரைவில் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கீதம் சீனிவாசராவின் 61-வது படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது.தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். படத்தின் மேற்பார்வையாளராக இயக்குநர் நாக் அஸ்வின் செயல்படவுள்ளார்.
'ஆதித்யா 360' படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க பாலகிருஷ்ணா - சிங்கீதம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால், அந்தப் படம் சில காரணங்களால் துவங்க இல்லை. இந்நிலையில், இப்போது இயக்கும் புதிய படத்தில் நிறைய புதுமுகங்களை வைத்து இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தை குறிப்பிடும் விதமாக தங்களது சமூக வலைத்தளங்களில் SSR 61 (Singeetam Srinivasa Rao) என வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டுள்ளது.
English Summary
Singeetam Srinivasa Rao is directing a film at the age of 94