2026 டி20 உலகக் கோப்பைக்கான புதிய பாடலுக்கு இசை அமைத்துள்ள அனிருத்..! - Seithipunal
Seithipunal


09-வது டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில், இன்னும் 06 நாட்களில் தொடங்கவுள்ளது. 20 அணிகள் பங்கு பற்றி ஆடும் விளையாடும் 55 போட்டிகள் பிப்ரவரி 07 முதல் மார்ச் 08-ஆம் தேதி வரை நடக்க உள்ளது. 2024 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக களம் இறங்கவுள்ளது.

இந்நிலையில், 2026 டி20 உலகக்கோப்பை நிகழ்ச்சிக்கான புதிய பாடல் ஒன்றை அனிருத் இசையமைத்துள்ளார். 'Feel the Thrill' என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் வரிகளை ஆங்கிலத்தில் ஹைசன்பெர்க், ஹிந்தியில் ரகீப் ஆலம் இருவரும் எழுதியுள்ளனர். இதன் வெளியீட்டு அறிவிப்பை ஐசிசி அவர்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கான ஐசிசி உடன் கைக்கோர்த்து, புதிய பாடலை இசையமைத்திருக்கும் அனிருத் கூறியதாவது;  ''எனக்கு கிரிக்கெட் ஒரு சாதாரணமான போட்டி மட்டுமே கிடையாது. அது ஒரு உணர்வு. ஐசிசியின் ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பங்கு வகிப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். 20 நாடுகள், ஒரே சப்தம், நிஜமான திரில்லர் உடன் ஆட்டத்தைப் பார்க்கலாம்'' என்று பேசியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anirudh has composed the music for the new song for the 2026 T20 World Cup


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->