பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு பக்கவாதம்; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை..!
Apollo Hospital reports that H Raja has suffered a stroke
நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மேடையிலேயே மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்ற நிலையில், அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இன்று அவரின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நலம் முன்னேறி வருகிறது. உறவினர்கள், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார் என்று அந்த அறிக்கையில் மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Apollo Hospital reports that H Raja has suffered a stroke