ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதி கட்டிடத்தில் பயங்கர வெடிப்பு சம்பவம்; திட்டமிட்ட தாக்குதலா அல்லது விபத்தா?
A massive explosion occurred in a building in Bandar Abbas a port city in Iran
ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுக நகரம் பந்தர் அப்பாஸ். இன்று இந்த பகுதியில் 08 மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த 14 பேரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த வெடிப்பில் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு, அருகில் இருந்த கடைகள் மற்றும் பல வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளன. ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை கமாண்டரை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக செய்திகள் பரவிய நிலையில், அதனை ஈரானின் அரசு ஊடகம் மறுத்துள்ளது.
இந்த விபத்து எரிவாயு கசிவால் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த வெடிப்பு எதனால் ஏற்பட்டது? இது திட்டமிட்ட தாக்குதலா அல்லது விபத்தா? என்பது குறித்து ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் கடற்படை ஈரானை நோக்கி நகர்ந்து வரும் இந்த சூழலில், பொருளாதார மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A massive explosion occurred in a building in Bandar Abbas a port city in Iran