Cyber Bullying; சமூக வலைதளங்களில் மூழ்கி சீரழியும் சிறார்கள்; பொருளாதார பொருளாதார ஆய்வறிக்கையில் அதிர்ச்சி..! - Seithipunal
Seithipunal


நாளை (பிப்ரவரி 01) ஞாயிற்றுக்கிழமை மத்திய  பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 09 வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை (Survey) வெளியிட்டுள்ளது.

அதாவது, கட்டுப்பாடற்ற டிஜிட்டல் பயன்பாடு சிறுவர்களின் மனநலம், கல்வித்திறன் மற்றும் சமூக நடத்தையைப் பாதிப்பதாக ஆய்வறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே சமூக வலைதள போதையால் மன அழுத்தம் மற்றும் 'Cyber Bullying' அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு, சமூக வலைதளங்கள், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கேமிங் ஆப்ஸ்கள் பயனர்களின் வயதைத் துல்லியமாகச் சரிபார்ப்பதை ஆன்லைன் நிறுவனங்கள் உறுதி செய்யதல், திரை நேரத்தைக் குறைக்கப் பள்ளிகளில் 'டிஜிட்டல் வெல்னஸ்' பாடத்திட்டத்தைக் கொண்டு வருதல், தினசரி உடல் உழைப்பைக் கட்டாயமாக்குதல் மற்றும் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் 'ஆஃப்லைன் யூத் ஹப்களை' உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளை ஆய்வறிக்கை வழங்கியுள்ளது.

அத்துடன், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிறுவர்களின் ஆரோக்கியத்தைக் கேட்டும் என்பதால், காலை 06 மணி முதல் இரவு 11 மணி வரை இது போன்ற உணவுகளின் விளம்பரங்களுக்கு ஊடகங்களில் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The economic survey report reveals the shocking finding that children are being corrupted by being engrossed in social media


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->