போட்டோ ஷூட் பெயரில் நடந்த ஆபாச நாடகம்! - தப்பியது எப்படி? கறுப்புப் பக்கங்களை அம்பலப்படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ் - Seithipunal
Seithipunal


தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஐஸ்வர்யா ராஜேஷ், தனது திரைப் பயணத்தின் ஆரம்பக்காலத்தில் சந்தித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக, சிறுவயதில் ஒரு ஒளிப்படக் கலைஞர் (Photographer) தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதைக் குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார். "போட்டோ ஷூட்" என்ற பெயரில் தன்னை அழைத்த அந்த நபர், உடன் வந்த சகோதரரை வெளியே அமர வைத்துவிட்டு, ஐஸ்வர்யாவை மட்டும் தனி அறைக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உள்ளாடைகளை வழங்கி, "உன் உடல் வாகைப் பார்க்க வேண்டும், இதனை அணிந்து வா" என்று வற்புறுத்தியுள்ளார்.

வெகுளியான அந்த வயதில், "சினிமாவில் இப்படித்தான் நடக்குமோ?" என்று அவர் ஒரு நிமிடம் குழம்பியுள்ளார். ஒருவேளை இன்னும் சில நிமிடங்கள் அங்கேயே நீடித்திருந்தால், அவரது பேச்சை நம்பி தான் ஏமாந்திருக்கக்கூடும் என்றும், ஆனால் ஏதோ விபரீதம் நடப்பதை உணர்ந்து, சகோதரனிடம் அனுமதி பெற்று வருவதாகக் கூறி அங்கிருந்து சாதுர்யமாகத் தப்பியதாகவும் ஐஸ்வர்யா விவரித்துள்ளார்.

"என்னைப்போல் இன்னும் எத்தனை இளம்பெண்களை அவர் இப்படி ஏமாற்றியிருப்பாரோ?" என்ற அச்சம் இன்னும் தன்னை வாட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திரைத்துறை அனுபவங்கள் குறித்துப் பேசுகையில், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் ஒருவர் தன்னை மற்ற நடிகைகளுடன் ஒப்பிட்டு, பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தது மனக்காயத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

"தாமதமாக வந்ததற்காகத் திட்டுவதில் தவறில்லை, ஆனால் ஒரு நடிகையை மற்றவருடன் ஒப்பிட்டுப் பேசுவதும், பலருக்கு முன்னால் ஒருவரை இழிவுபடுத்துவதும் நாகரிகமான செயல் அல்ல" என ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நேர்காணலில் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

obscene drama unfolded name photoshoot How she escape Aishwarya Rajesh exposes dark side


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->