எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி குறித்த தகவல்; 'குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே'; மத்திய அரசு விளக்கம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் பருவ வயது பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கிய குற்றச்சாட்டில் சிறையில் இருந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் (தொழிலதிபர்கள்) பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று அமெரிக்க நீதித்துறை லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அதில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயாரும், பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பில் கேட்ஸ், ரஷியப் பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் அவருக்கு பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளமை தற்போது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீனின் மின்னஞ்சல் ஒன்றில், பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017-இல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. 

இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்துள்ளதாவது;

"அந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் குறித்த உண்மைத் தகவலைத் தவிர, மற்ற அனைத்தும் ஒரு குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே. இதற்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை; இதை மிகுந்த அருவருப்புடன் நிராகரிக்கிறோம்" என்று விளக்கமளித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The central government clarifies the information about Prime Minister Modi in the Epstein files


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->