போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறும் இஸ்ரேல்; காசாமீது வான்வழித் தாக்குதல்; 06 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்த சோகம்..!
31 people including 6 children were killed in an Israeli airstrike on Gaza
கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி, காசாவில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் அதனை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது.
காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, காவல் நிலையம் மற்றும் கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முகாம் மீதான தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், குடியிருப்புத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 05 பேர் பலியாயுள்ளனர். தொடர்ந்து, காவல் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண் போலீசார் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிச் செயல்பட்டதற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் காசாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான ரஃபா எல்லை நாளை திறக்கப்படவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில், போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக இந்த எல்லை திறக்கப்படுகின்றமை சிகிச்சைக்குக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு இது ஒரு முக்கியமாக நிகழ்வாகும். கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 509 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
31 people including 6 children were killed in an Israeli airstrike on Gaza