தவெக -உடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் NDA நடத்தவில்லை; பியூஷ் கோயல்..!
Piyush Goyal says that the NDA has not held any alliance talks with the TVK so far
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை NDA கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் குறித்தும் தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, தவெகவை பாஜக கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள், போவார்கள். அவர்களால் எந்தத் தாக்கமும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், திரையுலகில் ரசிகர்களை வைத்திருப்பதும் அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள் என்று குறிப்பிட்டதோடு, விஜய்யுடன் இதுவரை எந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையும் NDA நடத்தவில்லை என்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல. திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது" என்றும் ஆவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Piyush Goyal says that the NDA has not held any alliance talks with the TVK so far