உண்ணாவிரத போராட்டம் - எம்.பி. சசிகாந்த் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதி..!!
mp sasi kanth admitted chennai rajeev gandhi hospital
திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் திருவள்ளூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால் நேற்று அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், எம்.பி சசிகாந்த் செந்தில் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது, சசிகாந்த் செந்திலின் இதய துடிப்பில் மாற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
mp sasi kanth admitted chennai rajeev gandhi hospital