கூந்தல் அடர்த்தி இல்லையா? இதை செய்யுங்கள், கூந்தல் வலிமை & கருமை ஒரே வாரத்தில்...!
Dont have thick hair Do this hair strong dark just one week
கூந்தல் அடர்த்தியாக:
லாவண்டர் எண்ணெய் - 5 துளிகள் விளக்கெண்ணெய் - 1 ஸ்பூன் 2 எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை உங்கள் தலையில் நன்றாக தடவ வேண்டும். 15 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
பிறகு, நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் ஷாம்பூவால் தலை முடியை தேய்த்து வெது வெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் இதனை தொடர்ந்து செய்து வருவதால் உங்கள் முடி விரைவில் அடர்த்தியாகும்.

பொடுகு மறைய:
2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3-4 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை உங்கள் ஸ்கால்ப்பில் தடவ வேண்டும். உங்கள் விரல் நுனியால் நன்றாக 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி ஆரோக்கியமான கூந்தலுடன் அழகான கூந்தலும் கிடைக்கும்.
கூந்தல் வலுப்பெற, கருமையாக:
பீட்ரூட் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கையில் கிளவுஸ் அணிந்து கொண்டு தலைமுழுவதும் இதனை தேய்த்திடுங்கள்.
பின்னர் தலையில் ஹேர் கேப் கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
இரண்டு மணி நேரம் கழித்து கழுவிடலாம்.
English Summary
Dont have thick hair Do this hair strong dark just one week