புதுச்சேரியைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் ஒருவர் மாரடைப்பால் மரணம்: மருத்துவத்துறையினர் அதிர்ச்சி..!
A cardiologist from Puducherry dies of a heart attack
சென்னையைச் சேர்ந்த, 39 வயதான இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் பணியில் இருக்கும்போதே திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இது போன்று புதுச்சேரியைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலங்களில் மாரடைப்பால் இறக்கும் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது கவலை அளிக்கிறது. கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் பணிபுரிந்த, சென்னையை சேர்ந்த 39 வயது இதய நோய் சிறப்பு மருத்துவர் கிராட்லின் ராய், இதய நோயாளிக்கு சிகிச்சை அளிக்கச் சென்ற போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மாரடைப்பால் மருத்துவர்கள் உயிரிழப்பது அதிகரிப்பது குறித்தும், அதில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றியும், மருத்துவர்களிடையே விவாதம் எழுந்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 42 வயதே ஆன இதய நோய் நிபுணர் தேவன் என்பவர் தற்போது, மாரடைப்பால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A cardiologist from Puducherry dies of a heart attack