ஒடிசாவுக்குள் நுழைந்த மேற்கு வங்க SIR அதிகாரிகளை தாக்கிய கிராம மக்கள்; 72 பேர் வழக்கு பதிவு; நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க மாநிலத்தில் SIR பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் உள்ள நயகிராம் என்ற இடத்திற்கு செல்லும் போது, வழி தவறி தவறுதலாக ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்குள் சென்றுள்ளனர்.

ஆனால், அங்குள்ள கிராம மக்கள், உண்மை தெரியாது இரு அதிகாரிகளையும் குழந்தை கடத்துவதற்காக வந்துள்ளனர் என்று சந்தேகப்பட்டுள்ளனர். இது தொடர்பாக SIR பணிக்காக வந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, கிராம மக்களுடன் அவர்கள் தகராறு செய்துள்ளனர். இதனால் கிராம மக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், போலீசாருடனும் கிராம மக்கள் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். அதன் பின்னர், போலீசார் இரண்டு  அதிகாரிகளையும் மீட்டுள்ளனர். அடுத்து, 72 கிராம மக்கள் மீது இச்சம்பவம் தொடர்பாக இரண்டு வழக்குககளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villagers attack West Bengal SIR officials who entered Odisha


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->