நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப்; தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு..! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்தி, வீடியோ எடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அத்துடன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏனைய ஆறுபேருக்கு தண்டனையை உயர்த்தி வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், கடந்த டிசம்பர் 08 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது, போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி திலீப்பை (எட்டாவது குற்றவாளி) எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் விடுவித்தது. 

இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது என்றும், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் கூறி கேரளா அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கில் நடிகர் திலீப்புடன் சேர்த்து விடுவிக்கப்பட்ட சார்லி தாமஸ், சனில் குமார் மற்றும் சரத் ஆகியோரின் விடுதலையையும் அரசு எதிர்த்துள்ளது. அத்துடன், இவ்வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பல்சர் சுனி உள்ளிட்ட 06 பேருக்கும் தண்டனையை உயர்த்தி (ஆயுள் தண்டனை வரை) வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது.

கேரளா அரசின் இந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கு நாடிகள் திலீப்பிற்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala government appeals against actor Dileeps acquittal in actress sexual assault case


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->