'திமுக ஒரு மூழ்கும் கப்பல்; அதில் கூடுதல் சுமையாக ஓ.பன்னீர்செல்வம்'; தவெக அருண்ராஜ் தாக்கு..! - Seithipunal
Seithipunal


முன்னாள் அதிமுகவின் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று,  தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதிவை ராஜினாமா செய்து கடிதத்தை தலைமை செயலகத்தில் சட்டசபை செயலாளரிடம் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், அவரது காரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும், காரின் முன்பகுதியில் திமுக கொடியும் பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் குறிப்பிடுகையில்; 

திமுக ஒரு மூழ்கும் கப்பல். அதில் கூடுதல் சுமையாக ஓ.பன்னீர்செல்வம் இணைவதால் வேகமாக கப்பல் மூழ்குமே தவிர மீண்டு வராது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், தவெக நிர்வாகிகளிடையே வேட்பாளர் தேர்வில் எந்த குழப்பமும் இல்லை என்றும், இது தொடர்பாக யாரோ சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், சசிகலா கூட்டணிக்கு வருவது குறித்து விஜய்தான் முடிவெடுப்பார் என்றும், காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வருமா என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK Arunraj says that DMK has added O Panneerselvam as an additional burden to a sinking ship


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->