தமிழ்நாட்டின் பெருமை..! - காமன்வெல்த்தில் வெள்ளி வென்று கெத்து காட்டிய ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜய் நெஞ்சார்ந்த வாழ்த்து...!
pride Tamil Nadu Chief Minister Vijay congratulates Raja Muthupandi winning silver Commonwealth Games
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தூத்துக்குடி வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவரது இந்த வெற்றிக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது,"ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராஜா முத்துப்பாண்டியின் சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
அவரது வெற்றி, தமிழக இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையையும், விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் அளிக்கட்டும்.
ராஜா முத்துப்பாண்டி தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து, இந்தியத் திருநாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் மேலும் பல பெருமைகளைத் தேடித் தர எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்"என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
English Summary
pride Tamil Nadu Chief Minister Vijay congratulates Raja Muthupandi winning silver Commonwealth Games