வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர் நீக்கம்...! தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்தார் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்...! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியலிலிருந்து லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தேர்தல் ஆணையத்தின் சொந்த மென்பொருள் வாயிலாக, வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கான படிவம் 7 தானாக உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது சாதாரணத் தொழில்நுட்பக் கோளாறு அல்ல; வாக்குரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.தேர்தல் பதிவு அதிகாரிகளே புகார்தாரர்களாக மாறி, தங்களின் மின்னணுக் கையொப்பங்களைப் பயன்படுத்திப் படிவங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் கையேடு 2024-ன்படி, தேர்தல் அதிகாரிகள் தாங்களாகவே படிவம் 7-ஐத் தாக்கல் செய்ய அனுமதியில்லை என்றும், அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்தான் பெயர் நீக்கத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்தச் செயல்பாடுகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முறைகேடாகப் படிவங்கள் உருவாக்கப்பட்டு பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் வாக்காளர்களின் மாநில வாரியான, தொகுதி வாரியான பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.முறையான கள ஆய்வின்றி நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை உடனடியாக மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் குடிமக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ள வாக்குரிமையைத் தொழில்நுட்பத்தின் பின்னால் மறைந்து பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிகளின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வரை தங்களது அறவழிப் போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MP Manickam Thakur strongly criticized the Election Commission for improper removal of names from the voter list


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->