தூத்துக்குடியில் சோகம்! மணப்பாட்டில் ராட்சத அலையால் படகு கவிழ்ந்து விபத்து...! கடலில் அடித்துச் செல்லப்பட்ட 23 வயது இளம் மீனவர் சடலமாக மீட்பு...! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பியபோது, ராட்சத அலையில் படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மாயமான இளம் மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மீனவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்த எடிசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், 11 மீனவர்கள் கடந்த புதன்கிழமை பிற்பகல் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

மீன்பிடித் தொழிலை முடித்துக்கொண்டு மாலையில் கரையை நோக்கிப் படகில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது மணப்பாடு தூண்டில் வளைவு அருகே கடலில் எழுந்த பிரம்மாண்ட அலை, படகைத் தாக்கியது. இதில் நிலைதடுமாறிய படகு திடீரெனக் கவிழ்ந்ததால், அதில் இருந்த 11 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.

கடலில் தத்தளித்த 11 பேரில், 10 மீனவர்கள் நீந்தி கரையை அடைந்து உயிர் தப்பினர். ஆனால், மணப்பாடு சுனாமி காலனியைச் சேர்ந்த சிலுவைப்பிச்சையின் மகன் வால்டர் (23) மட்டும் கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் சக மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

25-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்று பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடத்தினர். இந்தியக் கடலோர காவல் படையினரும் ரோந்துப் படகு மற்றும் ‘டோனியர்’ வகை விமானத்தின் உதவியுடன் தேடுதல் பணியை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற தேடுதல் பணியின் முடிவில், மணப்பாடு தூண்டில் பாலத்தை ஒட்டியுள்ள ஆழமான கடல் பகுதியில் வால்டரின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.கடலுக்குச் சென்ற இளம் மீனவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீனவ கிராம மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boat capsizes due to huge wave in Manapattu 23 year old young fisherman washed away sea body recovered


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->