சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் தசரா விடுமுறை...! அவசர வழக்குகளுக்கான தாக்கல் மற்றும் விசாரணை தேதிகள் அறிவிப்பு...!
Madras High Court to observe Dussehra holiday from tomorrow Announcement filing and hearing dates urgent cases
தசரா பண்டிகையை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நாளை முதல் அக்டோபர் 25-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவசர வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் விசாரிப்பதற்கும் உரிய நடைமுறைகளை விளக்கி, உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-lv5ph.jpg)
அதன்படி, அவசர வழக்குகளை அக்டோபர் 21-ஆம் தேதி தாக்கல் செய்யலாம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அக்டோபர் 23-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் அவசர வழக்குகளை நீதிபதிகள் சுந்தர் மோகன், ஜி.கே. முத்துக்குமார், வி. லட்சுமிநாராயணன், என். செந்தில்குமார், என். ரமேஷ் ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.
அதேபோல், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ஐ.ஆர்.சி.பி. முருகன், என். திலீப்குமார் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் எனத் தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Madras High Court to observe Dussehra holiday from tomorrow Announcement filing and hearing dates urgent cases