'நேரத்துக்கு வரணும்ல'...! - போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பைக்கில் பயணித்த அமைச்சர் ஆனந்துக்கு குவியும் பாராட்டுகள்...! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு அருகே ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், அமைச்சர் என். ஆனந்த் காரைத் தவிர்த்து இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கூவம் தூர்வாரும் பணிகள் நடைபெறும் இடத்துக்கு சென்றார்.சென்னை பாடிகுப்பம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றுப் பகுதியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதன் தொடக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், நேரில் கள ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளைத் தொடங்கி வைப்பதற்காக காரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டார்.ஆனால், வழியில் எதிர்பாராத வகையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் காரில் தொடர்ந்து சென்றால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைய காலதாமதமாகும் நிலை உருவானது.இதையடுத்து, தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் அமைச்சர் என். ஆனந்த், தவெக நிர்வாகி ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஏறி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு சென்றார்.

அமைச்சருக்கான வழக்கமான வாகனப் பயணத்தைத் தவிர்த்து, பொதுமக்களைப் போல இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அவரது நடவடிக்கை அங்கு கவனம் பெற்றது.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடைந்த அமைச்சர், கூவம் ஆற்றுப் பகுதியில் நேரடியாக களமிறங்கி தூர்வாரும் பணிகளின் நிலவரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I have time Minister Anand who rode bike avoid traffic congestion getting praise


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->