சங்கீதா விவாகரத்து வழக்கு: ஏப்ரல் 20-ஆம் தேதி விசாரணை; விஜய் நேரில் ஆஜராக உத்தரவு..!
Vijay and Sangeetha divorce case to be heard on April 20th
நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ள விவகாரம் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
விஜய்க்கு பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய தகாத உறவு இருப்பதே இந்த விவாகரத்துக்கு காரணம் எனவும் சங்கீதா மனுவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ''நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததை கண்டுபிடித்த பிறகு விஜயால் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். விஜய் நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டது. 2021 -ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வாழ்ந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சுமூகமாகப் பிரிய பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்ததால் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.
ஆனால், விஜய் தரப்பிலிருந்து தற்போதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு எந்தப் பதிலும், மறுப்பும் வரவில்லை. சங்கீதாவின் விவாகரத்து வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
English Summary
Vijay and Sangeetha divorce case to be heard on April 20th