திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறது! துணை முதல்வர் பதவி... 'விஜய்' பக்கம் சாய்கிறதா 'கை'? - தொகுதிப் பங்கீட்டில் அதிரடித் திருப்பம்! - Seithipunal
Seithipunal


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை ஒரு 'திரில்லர்' திரைப்படம் போல மாறியுள்ளது.

இழுபறி
கடந்த முறை 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ், இம்முறை கூடுதல் இடங்களுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கையும் (Power-sharing) வலியுறுத்துகிறது.

காங்கிரஸ் டிமாண்ட்: 39 தொகுதிகள், 2 ராஜ்ய சபா இடங்கள் மற்றும் உள்ளாட்சிப் பதவிகளில் 30% இட ஒதுக்கீடு.

திமுக நிலைப்பாடு: புதிய கூட்டணிக் கட்சிகள் வருவதால், பழையபடி 25 இடங்களே தர முடியும் என்பதில் திமுக பிடிவாதமாக உள்ளது.

நள்ளிரவு ரகசிய சந்திப்பும் தவெக-வின் 'ஆஃபரும்':
திமுக-வின் பிடிவாதத்தால் அதிருப்தியடைந்த ராகுல் காந்தியின் தேர்தல் வியூகக் குழுவினர், தவெக (TVK) நிர்வாகிகளுடன் நள்ளிரவில் ரகசியமாகப் பேசியது திமுக-வை உதறல் எடுக்க வைத்துள்ளது.

தவெக வழங்கிய வாக்குறுதிகள்:
காங்கிரஸுக்கு 70 தொகுதிகள்.
துணை முதல்வர் பதவி.
30% வாக்கு வங்கி பலம் தங்களுக்கு உள்ளதாகத் தவெக தரப்பு தரவுகளை அடுக்கியுள்ளது.

இதற்கிடையே "அரசியல் செய்யத்தான் வந்திருக்கிறோம், என்ஜிஓ (NGO) நடத்த அல்ல" என காங்கிரஸ் தரப்பு திமுகவிற்கு காட்டமாக (மறைமுகமாக) பதிலடி ஒன்றை கொடுத்திருப்பது கூட்டணியின் விரிசலைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.

மேலும், தவெக-வின் அதிரடி மூவ் குறித்துத் தகவல் கிடைத்தவுடன், இன்று அவசரமாகக் காங்கிரஸைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது திமுக. இன்றைய கூட்டத்தில் காங்கிரஸுக்குத் திருப்திகரமான முடிவு எட்டப்படாவிட்டால், அவர்கள் 'விஜய்' பக்கம் பார்வையைத் திருப்புவது உறுதியாகத் தெரிகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK vs. Congress Seat Sharing Tensions the TVK Factor


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->