அதிரடி...! கூட்டணி குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி...! -மு க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம்...!
end alliance chaos O Panneerselvam joins DMK presence MK Stalin
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் மேடை நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் மோதும் நான்கு முனைப் போட்டி இந்த முறை தேர்தலை மேலும் விறுவிறுப்பாக்கியுள்ளது.

கூட்டணி அமைத்தல், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்ற பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.இந்த அரசியல் பரபரப்பின் மத்தியில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எந்த அணியில் சேரப்போகிறார் என்ற கேள்வி நீண்டநாளாக பேசுபொருளாக இருந்தது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம்’ மூலம் தனிப்பட்ட அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிவுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த முறை சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணி உருவான நிலையில், ஓ.பி.எஸ்.யையும் அதில் இணைக்க முயற்சிகள் நடந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்க்க தயக்கம் காட்டியதால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
இதனால் ஓ.பி.எஸ். அணியில் இருந்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப. கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்ட முக்கிய ஆதரவாளர்கள் பலரும் அவரை விட்டு விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்தனர்.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ எனத் தெரிவித்து தன் அரசியல் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், “என்னை கட்சியில் இருந்து நீக்கிய காரணத்தை விளக்க வேண்டும்; தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலகத் தயார்” என்றும் அண்மையில் உரையாற்றினார்.
இந்த சூழ்நிலையில் அரசியல் திருப்பமாக, ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.
அவருடன் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வின் பக்கம் திரண்டனர்.இதற்கு முன்னதாக, தி.நகரில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒரே காரில் அண்ணா அறிவாலயத்துக்கு பயணம் செய்தது, இந்த அரசியல் மாற்றத்தின் முக்கியத்துவத்தை மேலும் வெளிப்படுத்தியது.
English Summary
end alliance chaos O Panneerselvam joins DMK presence MK Stalin