ரவி மோகனுக்கு விஜயகாந்த் கொடுத்த மறக்க முடியாத அட்வைஸ்! அப்படியே பின்பற்றிய ரவி மோகன்!
Vijayakanth unforgettable advice to Ravi Mohan Ravi Mohan followed it exactly
தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்து, அவர்களுக்கு இணையான வரவேற்பையும் செல்வாக்கையும் பெற்றவர். பின்னர் அரசியலிலும் களமிறங்கி, கருணாநிதி – ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு சவாலாக உருவெடுத்தார்.
அரசியலில் சில துரோகங்களையும் மன உளைச்சல்களையும் சந்தித்த விஜயகாந்த், உடல்நலப் பிரச்சனைகளால் பல ஆண்டுகள் சிகிச்சை பெற்றார். பின்னர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தது ரசிகர்களையும் அரசியல் வட்டாரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
சினிமாவில் முன்னணி நடிகர்களாக உயர்ந்த விஜய், சூர்யா உள்ளிட்ட பலருக்கு ஆரம்பகட்டத்தில் உதவி செய்தவர் விஜயகாந்த். சம்பளம் வாங்காமல் கேமியோ ரோலில் நடித்தும், புதியவர்களுக்கு ஆதரவாக நின்றும் அவர் பெயர் பெற்றார். ஷாம் உள்ளிட்ட பல இளம் நடிகர்களும் அவரது ஆதரவை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் சமீபத்திய பேட்டியில் விஜயகாந்த் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
“நாம் அவரை ‘கேப்டன்’ என்று அழைப்பது காரணம் உண்டு. ஒரு கேப்டன் சாதி, மதம், இனம், மொழி என எதையும் பார்ப்பதில்லை. அப்படித்தான் விஜயகாந்த் இருந்தார். அவர்மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது,” என ரவி மோகன் கூறினார்.
ஒரு படப்பிடிப்பு நேரத்தில் இருவரின் ஷூட்டிங்கும் ஒரே இடத்தில் நடைபெற்றபோது, விஜயகாந்தை சந்திக்க சென்றதாகவும், அப்போது “வா ரவி” என்று நண்பனாக அருகில் அமர வைத்து, தனது படங்களைப் பற்றி பெருமையாக பேசியதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
அதோடு மட்டுமல்லாமல், “பீச்சுக்கு போய் நன்றாக கத்து. குரல் தெளிவாக வரும்” என்று விஜயகாந்த் தன்னுக்கு ஆலோசனை வழங்கியதாகவும் ரவி மோகன் தெரிவித்தார். அவர் சொன்னபடி ஒரு வாரம் செய்து பார்த்ததாகவும் கூறினார்.
“அவரைப் போன்ற நல்ல மனசு எல்லோருக்கும் வர வேண்டும்” என்று உருக்கமாக ரவி மோகன் தெரிவித்தார்.கேப்டன் விஜயகாந்தின் மனிதநேயமும், இளம் தலைமுறையினருக்கு அவர் காட்டிய அக்கறையும் மீண்டும் ஒருமுறை இந்த சம்பவம் மூலம் வெளிப்பட்டுள்ளது.
English Summary
Vijayakanth unforgettable advice to Ravi Mohan Ravi Mohan followed it exactly