திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதி..! - Seithipunal
Seithipunal


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் (88) உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகனுக்கு வயது மூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். வயதுமூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தாலும், தொடர்ச்சியாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ள நிலையில்,  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK General Secretary Duraimurugan admitted to hospital due to ill health


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->