''இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் அனைத்தும் கிடைக்கும்; நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவும் இல்லை''; புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நிறுவப்பட்டுள்ள, சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை மடத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த வளாகத்தில் உள்ள சேவை மையக் கட்டிடத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில் ராமகிஷ்ண மடம் மற்றும் மிஷன் தலைவர் ஸ்ரீமத் கவுதமானந்தஜி மகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமிகூறுகையில், தெய்வ நம்பிக்கையை வளர்க்கின்ற வகையில் ராமகிருஷ்ண மடத்தின் மையங்கள் செயல்படுவது உண்மையில் மகிழ்ச்சி என்றும், புதுச்சேரி சிறிய மாநிலம். ஆன்மிக பூமி. சித்தர்கள் வாழ்ந்த. வாழந்து கொண்டிருக்கிற பூமி. எப்போதும் ஆன்மிகத்துக்கு குறைவில்லாத பூமி என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த பூமியில் எத்தனையோ சித்தர்கள், சன்னியாசிகள், முனிவர்கள் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும், அதனால் தான் இந்த பூமி எப்போதும் செழிப்பாக இருக்கிறது. பிற மாநிலங்கள் பொறாமை படக்கூடிய அளவில் கூட பொருளாதார நிலையில் உயர்ந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதற்கு காரணம் இது ஆன்மிக பூமி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் அனைத்தும் கிடைக்கும் என்றும், வேண்டும் காரியம் வெற்றி பெறும்; நம்பிக்கை இல்லாவிட்டால் எதுவும் இல்லை என்றும், அறிந்தவர்களுக்குத்தான் இதைப் பற்றித் தெரியும். எல்லோருக்கும் தெரிந்து விடாது. இறைவன் அருள் இல்லாவிட்டால் எதுவும் இல்லை. அது மிகமிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனைவரும் ஆன்மிக நிலையை உணர்ந்து நாள்தோறும் வழிபாட்டில் ஈடுபட்டு வந்தால் நினைக்கிற காரியம் கைகூடும் எனவும், அவர்கள் வாழ்க்கையில் நன்றாக இருப்பார்கள். ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வது என்பதே இறைவனுக்கு நாம் செய்கிற பணி. அது நமக்கு பெரிய பாக்கியத்தை கொடுக்கக்கூடியது என்று கூறியுள்ளார்.

அப்பா பைத்தியம் சாமிகள் விபூதியிட்டு, எனது தலையில் கையை வைத்தது எனக்கு மட்டும் தான் தெரியும் என்றும், அது எல்லோருக்கும் தெரியாது. தொடக்கத்தில் வெறுமனே கோயிலுக்குச் சென்று வருவேன். அப்பா பைத்தியம் சாமிகளைப் பார்த்து அவரது அருள் கிடைத்தபிறகுதான் இறை நம்பிக்கை வந்தது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அங்கு பேசிய முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளதாவது; மற்றவர்கள் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று இறை நம்பிக்கை உடையோர் சேவை செய்வார்கள் என்றும், துறவிகளான இங்குள்ள சுவாமிகளால் அது முடியும் எனவும், அந்த வகையில் ராமகிருஷ்ண மடத்தின் கிளையில் இந்த சேவை மையக் கட்டிடத்தை திறந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த மடத்தை கட்டுவதற்காக என்னை அணுகியபோது சில சிக்கல்கள் இருந்தன . அவற்றை சரி செய்து கொடுத்து, இங்கே மடம் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மருத்துவ உதவியோடு இறையருள் பெறுகின்ற வகையில் அமைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய எண்ணம் என்று பேசியுள்ளார்.

இந்த மடத்தின் மூலம் புதுச்சேரி மாநில மக்களுக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற அளவில், அனுமதி வழங்கிய எனக்கு அது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puducherry Chief Minister Rangasamy says that everything can be attained if one has faith in God


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->