'நாம் தமிழர்' கட்சி என்றைக்கோ 'ஓம் தமிழர்' கட்சியாக மாறிவிட்டது; அமைச்சர் வன்னி அரசு விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


''சனாதானத்தை ஆதரிக்கும் வலதுசாரியான 'நாம் தமிழர்' கட்சி என்றைக்கோ 'ஓம் தமிழர்' கட்சியாக மாறிவிட்டது. இந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இடதுசாரிகள் வலிமையாக வேண்டும் என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு.'' என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆவர் கூறியதாவது;

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணியின் வெற்றி என்பது ஏற்கெனவே உறுதிப்படுத்தப்பட்டதுதான். விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், விசிக ஆதரவுடன் வன்முறை, பதற்றம், பணப்பட்டுவாடா இல்லாமல் இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும்,  இது, ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், வெற்றி குறித்த முதல்வர் விஜய்யின் அறிக்கையில் கூட்டணி கட்சித் தலைவர்களை குறிப்பிடவில்லை என்று கூறுவது, கூட்டணிக்குள் சிண்டு முடிக்கும் வேலை என்றும், இந்த வேலையை நிறைய பேர் செய்கின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். முதல்வரும் அமைச்சர்களும் அவர்களது ஸ்டைலில் சைகை மூலம் வெற்றியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். நாங்கள் எங்களது ஸ்டைலில் மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எஸ்ஐஆர் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட திமுக, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்கவில்ல என்றும்,  ஜனநாயகத்தை தேர்தல் ஆணையம் கேள்விக்குறியாக்கி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜகவின் கூலிப்படைதான் தேர்தல் ஆணையம் என்றும்,  தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும், இது வலிமையாக முன்னெடுக்க வேண்டிய ஒரு போராட்டம். எத்தனை ஒடுக்குமுறை செய்தாலும், இந்தப் போராட்டம் வெல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சனாதானத்தை ஆதரிக்கும் வலதுசாரியான 'நாம் தமிழர்' கட்சி என்றைக்கோ 'ஓம் தமிழர்' கட்சியாக மாறிவிட்டது. இந்தக் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வலிமையான கொள்கை கோட்பாடு கொண்ட கட்சிகள். இடதுசாரிகள் வலிமையாக வேண்டும் என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இடைத்தேர்தல் முடிவு குறித்து பேசிய ஸ்டாலின், ''தவெகவுக்கு வெற்றியில் தோல்வி; திமுகவுக்கு தோல்வியில் வெற்றி''என்று கூறியிருக்கிறார். இடைத்தேர்தலில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, முந்தியிருப்பதையே தங்களது வெற்றி என்று கருதி மு.க.ஸ்டாலின் அவ்வாறு கூறியிருக்கலாம்.'' என்று அமைச்சர் வன்னி அரசு செய்தியார்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vanni Arasu criticized the Naam Tamilar Katchi stating that it had long since transformed into Om Tamilar Katchi


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->