நாட்டில் ஆபத்தான மற்றும் தீவிரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி ; இண்டியா கூட்டணி, சிஜேபி அமைப்பினரை சாடிய நிதின் நவீன்..! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக இண்டியா கூட்டணி மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரை பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் சாடியுள்ளார். இது குறித்து அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;

இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான மற்றும் தீவிரமான சூழ்நிலையை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. இதைச் செய்பவர்கள் யார்? ராகுல் காந்தி தலைமையிலான இண்டியா கூட்டணி, அரவிந்த் கேஜ்ரிவாலின் கூட்டாளிகளாக உள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற இரண்டு அராஜகக் குழுக்கள்தான் என்று கடுமையாக விரமர்சித்துள்ளார்.

அத்துடன், மக்கள் அவர்களை நிராகரித்து, ஜனநாயகம் அவர்களைத் தண்டித்தபோது, அந்தத் தோல்வியை ஏற்றுக்கொண்டு அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நாட்டை சீர்குலைக்கும் திட்டத்தை அவர்கள் வகுத்துள்ளனர் என்று சாடியுள்ளார்.

அரசியலமைப்பை முன்னிறுத்திக் கொண்டு ஜனநாயக அமைப்புகளையே எதிர்ப்பது, மக்களின் ஆணையை அவமதிப்பதாகும் என்று குறிப்பிட்டதோடு, எதிர்க்கட்சித் தலைவர்கள் பயன்படுத்தும் மொழியை நாட்டின் இளைஞர்கள் கவனித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியலமைப்பு அமைப்புகள் மற்றும் உயர்பொறுப்பு வகிப்போர் மீதான தாக்குதல்களை அவர்கள் நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டங்கள் உள்நாட்டு அரசியல் காரணங்களால் மட்டுமே நடத்தப்படவில்லை என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத வெளிநாட்டு சக்திகளும் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உலகளாவிய நெருக்கடிகள் இருந்தபோதிலும் நாடு முன்னேற்றம் கண்டு வருவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்றும், இதனால் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்துக் கொண்டு இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்று விமர்சித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nitin Navin lashed out at the INDIA alliance and CPI members accusing them of attempting to create a dangerous situation in the country


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->