'அமைதியை உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள்'; உயிர் நண்பியை கரம்பிடித்த விஜய் தேவரகொண்டா'; நெகிழ்ச்சி பதிவு..! - Seithipunal
Seithipunal


விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தனா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இவர்கள் இருவரும் 'கீதா கோவிந்தம், 'டியர் காம்ரேட்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக மாறியுள்ளனர்.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக பல வருடங்களாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால், அதற்கு எல்லாம் பதிலளிக்காமல் அமைதியாகவே நட்பை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் ஜனவரி தொடக்கத்திலிருந்தே இவர்களின் திருமணம் தொடர்பான செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இவர்களின் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஐடிசி மெமென்டோஸ் ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்றது. 

விஜய் தேவரகொண்டா ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால் காலை 10:10 மணிக்கு தெலுங்கு பாரம்பரியம் படியும், ராஷ்மிகா கர்நாடகா குடகு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் மாலை 04:30 மணிக்கு அவரது குடும்ப முறைப்படி கொடவா பாரம்பரியப் படியும் என இருமுறை திருமணச் சடங்குகள் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் தம்பதியினர் தற்போது அதிகாரப்பூர்வமாக தங்களது திருமணப் புகைப்படங்களை
வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் தேவரகொண்டா பதிவிட்டுள்ளதாவது:

"ஒரு நாள், நான் அவளை மிகவும் தேடினேன். அவள் கூட இருந்திருந்தால் என் நாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றும் வகையில் அந்தத் தேடல் இருந்தது.

அவள் எனக்கு எதிரே அமர்ந்திருந்தால், நான் உண்ணும் உணவு இன்னும் முழுமையாகவும், திருப்தியாகவும் இருந்திருக்கும் என்று தோன்றியது. அவள் என்னுடன் இருந்தால், என் உடற்பயிற்சிகள் ஒரு தண்டனையாகத் தெரியாமல் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

நான் எங்கே இருந்தாலும், அந்த 'வீடு' போன்ற உணர்வையும், அமைதியையும் உணர அவள் எனக்குத் தேவைப்பட்டாள். அதனால், என் உயிர் நண்பியை... என் மனைவியாக்கிக் கொண்டேன்." என தனது காதலை நினைவுப்படுத்தி பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vijay Deverakondas emotional post after marrying Rashmika Mandanna


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->