55 வீரர்கள் பலி…எல்லையில் எரியும் பதற்றம்...! - பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் நேரடி போர் அறிவிப்பு...!
55 soldiers killed Tensions burning border Pakistan vs Afghanistan direct war announcement
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பதற்றம் குறையாத எல்லை மோதல் தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு, தாலிபான் ஆதரவு பெற்ற குழுக்கள் காரணம் என இஸ்லாமாபாத் அரசு குற்றச்சாட்டு முன்வைத்து வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபரில் வெடித்த கடுமையான மோதல் பேச்சுவார்த்தையால் அடங்கியிருந்தாலும், சமீப நிகழ்வுகள் மீண்டும் தீப்பிடித்த சூழலை உருவாக்கியுள்ளன.

அண்மையில் இஸ்லாமாபாத் நகரில் ஷியா பிரிவினர் மசூதியில் நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 31 பேர் பலியானது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. இந்த தாக்குதலுக்குப் பின்னால் ஆப்கானிஸ்தான் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.
இதற்குப் பதிலடியாக, எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல்கள் நடத்தி, “பயங்கரவாத முகாம்கள்” அழிக்கப்பட்டதாகவும், 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.
ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களே பலியாகினர் என ஆப்கானிஸ்தான் மறுப்பு தெரிவித்தது.பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தான் தரப்பிலிருந்து கடுமையான எதிர்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ராணுவ முகாம்கள் உள்ளிட்ட பல இடங்கள் குறிவைக்கப்பட்ட இந்த தாக்குதலில் 55 பாக் வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில எல்லை முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும், பலர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் செய்திகள் பரவின.
இதையடுத்து பாகிஸ்தான் வெளிப்படையாக போரை அறிவித்து, அதிகாலை காபூல், கந்தஹார் உள்ளிட்ட பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. பல முக்கிய தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தாலிபான் தரப்பு தெரிவித்தது.
இந்த தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான போர் சூழலை உருவாக்கியுள்ளன. தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், தாலிபானை குறிவைத்து ‘ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்’ என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.இதனால் தெற்காசியாவில் மீண்டும் ஒரு பெரிய மோதல் வெடிக்கும் அபாயம் அதிகரித்து, உலக நாடுகள் கவலையுடன் நிலைமையை கண்காணித்து வருகின்றன.
English Summary
55 soldiers killed Tensions burning border Pakistan vs Afghanistan direct war announcement