மு.க. ஸ்டாலின் 73வது பிறந்தநாள்: ஆடம்பரம் வேண்டாம்… சேவையை செய்க...! - தொண்டர்களுக்கு உணர்ச்சி கடிதம்
MK Stalin 73rd birthday Dont extravagant service Emotional letter volunteers
திராவிட முன்னேற்றக் கழகம் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்காக எழுதியுள்ள உணர்வுபூர்வமான கடிதத்தில் தனது அரசியல் பயணத்தையும், பிறந்தநாள் வேண்டுகோளையும் பகிர்ந்துள்ளார்.
அதில்,"தலைவர் மு. கருணாநிதி மற்றும் அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து, சோவியத் தலைவர் ஸ்டாலின் பெயரைத் தாங்கி, கோபாலபுரத்தில் வளர்ந்த நான், இளமையிலேயே இயக்கப் பணியில் ஈடுபட்டு, திராவிட இயக்கத்திற்காக இளைஞர்களை திரட்டிய பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை சமமாக ஏற்றுக்கொண்டு வந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைவர் கலைஞரிடம் கற்ற ஒழுக்கமும் கடமை உணர்வும் தான் தன்னை வழிநடத்துவதாகவும், கனிவும் துணிவும் துணையாக மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மார்ச் 1-ஆம் தேதி தனது 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, படாடோப விளம்பரங்கள், ஆடம்பர கொண்டாட்டங்கள் போன்றவற்றைத் தவிர்த்து, கட்டுப்பாடுடன் எளிமையாக நிகழ்ச்சிகளை நடத்துமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
உற்சாகம் எல்லை மீறாமல், சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிறந்தநாளை கொண்டாடுவதற்குப் பதிலாக, ஏழை எளிய மக்கள், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு உதவிகள் செய்யவும், கட்சி கொடிகளை புதுப்பிக்கவும், கிளை அலுவலகங்களை சீரமைக்கவும், சி.ந. அண்ணாதுரை மற்றும் கலைஞர் பெயரில் உள்ள நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கவும், மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கவும், பெருமளவில் இரத்ததானம் செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகளே தமக்கு உண்மையான பிறந்தநாள் வாழ்த்தாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், இப்போதிலிருந்தே அனைவரின் கவனமும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி இருக்க வேண்டும் என்றும், தி.மு.க. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து, மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள சோர்வற்று உழைக்க வேண்டும்" என்றும் அவர் தொண்டர்களை ஊக்குவித்துள்ளார்.
ஆடம்பரத்தை விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துமாறு தனது அன்பான வேண்டுகோளைத் தெரிவித்தார்.
English Summary
MK Stalin 73rd birthday Dont extravagant service Emotional letter volunteers