புதிய உச்சம் எட்டிய தங்கம்… இரண்டு நாளாக விலை குறைவு...! இன்றைய விலை நிலவரம் என்ன...?
Gold hits new high Price falling two days What price situation today
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்றம் கண்டுவருவதால், புதிய உச்சங்களைத் தொட்டு விற்பனையாகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் விலை நிலவரம் தங்கம் வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே தங்க விலை வேகமாக உயர்ந்தது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,440 உயர்வு பதிவாக, செவ்வாய்க்கிழமை ரூ.240 மற்றும் புதன்கிழமை மேலும் ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,440 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
அதனைத் தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்க விலையில் சரிவு தொடர்கிறது.
கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலையில் மாற்றமின்றி நிலைத்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாட்களின் தங்க விலை (22 காரட்):
26-02-2026 – ரூ.1,19,360
25-02-2026 – ரூ.1,19,440
24-02-2026 – ரூ.1,19,120
23-02-2026 – ரூ.1,18,880
22-02-2026 – ரூ.1,17,440
கடைசி ஐந்து நாட்களின் வெள்ளி விலை:
26-02-2026 – ரூ.295
25-02-2026 – ரூ.295
24-02-2026 – ரூ.290
23-02-2026 – ரூ.300
22-02-2026 – ரூ.290
மொத்தத்தில், தங்க விலை உயர்வு-சரிவு என மாறுபட்டு காணப்படுவதால், சந்தையில் வாங்குபவர்களும் விற்பவர்களும் கவனமாக கணக்கிட்டு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Gold hits new high Price falling two days What price situation today