“நெல்சனின்.... இந்த ஸ்டைல் தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!” -விஜய் சேதுபதி வெளிப்படை
I really like Nelsons particular style Vijay Sethupathi reveals
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் திரையுலகில் அனைவராலும் பாராட்டப்படும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் அவர், கடைசியாக நடித்த “தலைவன் தலைவி” படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதை அடுத்து, பிரபல இயக்குநர் 'மிஷ்கின்' இயக்கும் “டிரெய்ன்” படத்திலும், பூரி ஜெகன்நாத் இயக்கும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் 'நெல்சன்' குறித்து விஜய் சேதுபதி தெரிவித்ததாவது,"நெல்சனின் எழுத்து பாணி எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரது படங்களில் வரும் கதாபாத்திரங்கள் எப்போதும் தனித்துவமாக இருக்கும். நான் ஜெயிலர் படத்தை 6 முதல் 8 முறை பார்த்துள்ளேன். அந்தப் படம் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
I really like Nelsons particular style Vijay Sethupathi reveals