நடிகர் ரஞ்சித் மீது போலீசில் புகார் - தவெக அதிரடி.!!
tvk petition against actor ranjith
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஞ்சித் விநாயகர் சதுர்த்தி விழாவில் விஜய் குறித்து பேசியது தொடர்பாக அவர் மீது தமிழக வெற்றிக் கழகத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்து முன்னணி சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் சந்திப்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
மதுரை மாநாட்டுல தம்பி விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லைனு பேசியிருக்கிறார். அப்படியென்றால் அவர் யாரை பார்த்து அதனை சொல்கிறார். எம்.ஜி.ஆரையா, ஜெயலலிதாவையா? இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல்ஹாசனையா?.
நடிகர் விஜய் பிரதமரை பார்த்து சொடக்கு போட்டு பேசுகிறார். இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் விளைவித்தார் பிரதமர் மோடி என்று கூறுகிறார். ஆனால் இதே விஜய், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந் தேதி கோவையில் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக பூனை குட்டியை போன்று கையை கட்டி அமர்ந்திருந்தார்.
அப்போது பிரதமரை சந்தித்தது எதற்காக?, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவா? மீனவர் பிரச்சனை குறித்து பேசவா? அல்லது கல்வியை சமத்துவமாக்க வேண்டும் என்று பேசுவதற்காகவா? அல்லது கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவா? எதுவும் இல்லை தன்னுடைய தலைவா என்ற படம் ஓடுவதற்காக பிரதமரை பார்த்துவிட்டு, இப்போது பிரதமரை பார்த்து கையை சொடக்கு போட்டு பேசுகிறார்.
இப்போ கையை சொடக்கு போட்டு பேசுற விஜய் பழசு எல்லாம் மறந்துட்டாரு. அமெரிக்காவே வியந்து பார்க்கும் ஒரே பிரதமர் மோடி. அவரை போய் கைநீட்டி சொடக்கு போட்டு பேச அருகதை இல்லை. முதல்வரை அங்கிள் என்றும், பிரதமரை மிஸ்டர் என்றும் குறிப்பிடுகிறார். இதுதான் அரசியல் நாகரீகமா? நீயே இப்படி இருந்தால், உன்ன நம்பி இருக்கும் இளைஞர்கள் என்ன ஆவார்கள்?
எனக்கு வர கோவத்துக்கு ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றுகிறது. அதனை நாம் ஓங்கி ஓட்டாக குத்துவோம் என்று பேசியிருந்தார். இந்த நிலையில், பொதுவெளியில் விஜயை ஓங்கி குத்த வேண்டும் என்று பேசியது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகர் ரஞ்சித் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
tvk petition against actor ranjith