நாளை முதல் சென்னையில் டீ, காபி, போன்டா, பஜ்ஜி, சமோசா விலை உயர்கிறது!
chennai tea coffie rate hike sep 2025
சென்னையில் டீ, காபி உள்ளிட்ட பானங்களின் விலை நாளை முதல் உயர இருக்கிறது.
டீ கடை வியாபாரிகள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், பால் விலை அதிகரிப்பு, டீ-காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவுகள் போன்ற காரணங்களால் விலை உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னையில் ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆக உயர்கிறது. அதேபோல், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறப்பு பானங்களின் விலைகளும் மாற்றப்பட்டுள்ளன.
புதிய விலைப்பட்டியலின்படி, பால் ரூ.15, லெமன் டீ ரூ.15, காபி ரூ.20, ஸ்பெஷல் டீ ரூ.20, ராகி மால்ட் ரூ.20, சுக்கு காபி ரூ.20, பூஸ்ட் ரூ.25, ஹார்லிக்ஸ் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பார்சல் விலைகளும் அதிகரிக்கின்றன. ஒரு கப் டீ மற்றும் பால் தலா ரூ.45, கப் காபி ரூ.60, ஸ்பெஷல் டீ, ராகி மால்ட், சுக்கு காபி தலா ரூ.60, பூஸ்ட் மற்றும் ஹார்லிக்ஸ் கப் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், போன்டா, பஜ்ஜி, சமோசா போன்ற ஸ்நாக்ஸ்கள் ஒன்றுக்கு ரூ.15 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னைவாசிகள் தினசரி அதிகம் பயன்படுத்தும் டீ, காபி விலை உயர்வு, சாதாரண மக்களுக்கு சுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வியாபாரிகள் தங்களின் அதிகரித்த செலவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளனர்.
English Summary
chennai tea coffie rate hike sep 2025