கொண்டாட்ட வீடு ரத்தக் குளமாகியது..! மனைவி, மாமியார் சடலமாக...!-ஓட்டம்பிடித்த கணவர்..!
celebration house became pool blood wife and mother in law were dead husband who ran away
டெல்லியில் ரோஹிணி பகுதியைச் சேர்ந்த யோகேஷ், தனது மனைவி பிரியா (34) மற்றும் மாமியார் குசும் சின்ஹா (63) உடன் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி இரத்த வெள்ளமாக மாறியது.

அங்கு பிறந்தநாள் பரிசு குறித்து ஏற்பட்ட வாக்குவாதம், யோகேஷ் – பிரியா இடையே கடும் தகராறாக மாறியது. இதில் சமரசம் செய்ய முயன்ற குசும் சின்ஹாவையும், தனது மனைவி பிரியாவையும் யோகேஷ் கத்தியால் குத்திக்கொன்று விட்டதாக காவலர்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், குசுமின் மகன் மேக் சின்ஹா, தாய் வீடு திரும்பாததால் கவலையுடன் அங்கு சென்றபோது, வீட்டின் வெளியே ரத்த தடயங்களும், உள்ளே கதவு பூட்டிய நிலையிலும் இருந்தது.
இதைத் தொடர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது, பிரியா மற்றும் குசும் இருவரும் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர்.மேலும், சம்பவ இடத்திலிருந்து இரத்தம் தோய்ந்த ஆடைகள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி காவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது, மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்த யோகேஷ் தனது குழந்தைகளுடன் தப்பிச் சென்ற நிலையில், அவரை பிடிக்க டெல்லி காவலர்கள் மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
celebration house became pool blood wife and mother in law were dead husband who ran away