2 வாரத்திற்கு முன் காணாமல் போன காதலி: கொலை செய்து மலைப்பகுதியில் வீசிய கொடூர காதலன்: பொலிஸாரின் கிடுக்குபிடி விசாரணையில் அம்பலம்..!
In Maharashtra a lover killed his girlfriend who went missing 2 weeks ago and dumped her body on a mountainside
மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி தாலுகா, மிர்ஜோலே கிராமத்தைச் சேர்ந்த பக்தி ஜிதேந்திர மயேகர் என்ற இளம்பெண், கடந்த இரண்டு வாரங்களாகக் காணாமல் போன நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்துள்ளனர். அப்போது, அப்பெண்ணின் காதலன் அவரைக் கொலை செய்து உடலை மலைப்பகுதியில் வீசியுள்ளமை அம்பலமாகியுள்ளது. காதலின் கைபேசி இருப்பிடத் தகவல் மூலம் காவல்துறையினர் கொலையாளி காதலனை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கடந்த 17-ஆம் தேதி பக்தி மயேகர் தனது தோழியின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரத்னகிரி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையின் முதல் கட்டமாக, பக்தியின் செல்போன் அழைப்புகள் மற்றும் இருப்பிடத் தகவல்களை போலீசார் ஆய்வு செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அப்போது, பக்தி மயேகர் காணாமல் போன அன்று கண்டாளா பகுதியில் இருந்தது தெரிய வந்ததாகவும், அந்தப் பகுதியில் தான் அவரது காதலரான துர்வாஸ் தர்ஷன் பாட்டீலும் வசித்து வந்துள்ளதாக பொலிஸாருக்கு தெரியவந்தது என்று கூறியுள்ளனர். இதனால், துர்வாஸ் தர்ஷன் பாட்டீலைக் கைது செய்து விசாரித்துள்ளனர். விசாரணையின் தொடக்கத்தில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதாகவும், விசாரணையைத் திசைதிருப்ப முயன்ராதாகவும் தெரிவித்துள்ளனர்.,
பின்னர், தீவிர விசாரணையில், அவர் பக்தியைக் கொலை செய்து, உடலை ஆம்பா மலைப் பகுதியில் வீசிவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளியான காதலன் அளித்த தகவலின் பேரில், மலைப்பகுதியில் பக்தி ஜிதேந்திர மயேகரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக, முக்கியக் குற்றவாளியான துர்வாஸ் தர்ஷன் பாட்டீலின் நண்பர்களான விஸ்வாஸ் விஜய் பவார் மற்றும் சுஷாந்த் ஷாந்தாராம் நரள்கர் ஆகியோரையும் கைது செய்துள்ள்ளதாகவும், கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீசார் மேலும் கூறியுள்ளனர்.
English Summary
In Maharashtra a lover killed his girlfriend who went missing 2 weeks ago and dumped her body on a mountainside