முதல் முறையாக இந்திய தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு 'ஆசியாவின் நோபல்' என்று அழைக்கப்படும் சர்வதேச விருது..! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே (Ramon Magasaysay) நினைவாக, அவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. குறித்த ரமோன் மகசேசே விருது, பெண் குழந்தைகள் தொடர்பாக பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஆசியாவின் நோபல்' என்று அழைக்கப்படும் இந்த விருது சமூக சேவை, கலை, இலக்கியம், வளரும் தலைவர்கள் என பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான ரமோன் மகசேசே விருது, பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் பெண் குழந்தைகள் கல்விக்காக பணியாற்றி வரும் 'Educate Girls' என்ற லாப நோக்கு அல்லாமல் பணியாற்றி வரும் தொண்டு நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விருதை பெறுவதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த முதல் தொண்டு நிறுவனம் என்ற பெருமை 'Educate Girls'க்கு இதற்கு கிடைத்துள்ளது. பிலிப்பைன்சின் மணிலாவில் வரும் நவம்பர் 07-ஆம் தேதி நடக்கும் விழாவில்  ரமோன் மகசேசே விருதுடன், சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையும் இந்த தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.

குறித்த  'Educate Girls' தொண்டு நிறுவனத்தை சபீனா ஹூசைன் என்பவர் 2007இல் தொடங்கினார். இவர் லண்டனில் உள்ள பொருளாதாரத்துக்கான பள்ளியில் பட்டம் பெற்றவர். பிறகு சான்பிரான்சிஸ்கோ நகரில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பெண் குழந்தைகள் கல்விக்காக தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். அங்கிருந்து தாயகம் திரும்பிய அவர் ராஜஸ்தானில் 'Educate GIrls' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி திறம்பட நடந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ramon Magsaysay Award for an Indian charity organization


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->