டிரீம் 11 விலகல்: ஆசிய கோப்பை போட்டியில் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சியில் களமிறங்கும் இந்திய அணி..! - Seithipunal
Seithipunal


பணம் செலுத்தி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் வகையில் சட்ட மசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இதனால், இந்திய கிரிக்கெட் அணியின் விளம்பரதாரராக இருந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான 'டிரீம் 11' பொறுப்பில் இருந்து விலகியுள்ளது. .

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை ஸ்பான்சராக இருந்த டிரீம்11,  2023 முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு ரூ.358 கோடி ஸ்பான்சர்ஷிப்பாக வழங்க இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

அதன்படி, டிரீம்11 மற்றும் மற்றொரு ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கம்பெனியான மை11 சர்க்கிள் ஆகியவை இந்திய அணிகளுக்கும் (ஆண்கள், பெண்கள், ஜூனியர்), ஐ.பி.எல். போட்டிக்கும் ஸ்பான்சர் அளித்து வந்தது. இதன்காரணமாக இந்திய கிரிக்கெட் வாரிய வருவாயில் அவற்றின் பங்களிப்பு சுமார் ரூ.1000 கோடியாக இருந்தது. தற்போது இணையவழி விளையாட்டு மேம்பாட்டு மற்றும் ஒழுங்கு முறை சட்ட மசோதாவை நிறைவேற்றப்பட்டுள்ளதால், இந்த வருமானத்தை இந்த கிரிக்கெட் வாரியம் இழக்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், பி.சி.சி.ஐ. புதிய ஸ்பான்சரை தேடுகிறது. குறித்த புதிய புதிய ஸ்பான்சரை பி.சி. சி.ஐ. ரூ.450 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 முதல் 2028 வரை இந்திய புதிய ஸ்பான்சர்ஷிப்புக்கான ஒப்பந்தம் நீடிக்கும். அதன்படி, டிரீம் 11 வழங்கிய தொகையை விட அதிகமான தொகையை பெற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், இருதரப்பு போட்டிக்கு ரூ.3½ கோடியும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய போட்டிகளுக்கு ரூ.1.5 கோடியும் இலக்காக பி.சி.சி.ஐ. நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 09-ந்தேதி தொடங்கவுள்ளது. அதற்குள் புதிய ஸ்பான்சர் நிறுவனம் கிடைப்பது கடினம் என்பதால், அந்த தொடரில் ஸ்பான்சர் இல்லாத ஜெர்சி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Team India will field in an unsponsored jersey in the Asia Cup due to the withdrawal of Dream11


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->