தொடக்க ஆட்டக்காரர்களில் அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்துள்ள ரோகித் சர்மா..!
Rohit Sharma has broken Chris Gayles record for hitting the most sixes among opening batsmen
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (ODI) தொடரின் முதல் போட்டி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
போட்டியில், 50 ஓவர்களின் முடிவில் 08 விக்கெட்டுகள் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 300 ரன்கள் குவித்தது. வெற்றி இலக்காக 301 ரன்களை விரட்டி, விளையாடிய இந்திய அணி, 49 ஓவர்களில் 06 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்து 04 விக்கெட்டுகள் மற்றும் 06 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்தப் போட்டியில் 2 சிக்சர் அடித்து, 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ரோகித் சர்மா மொத்தம் 329 சிக்சர்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக கிறிஸ் கெயில் 328 சிக்சர்கள் அடித்திருந்தார். இந்நிலையில், அந்த சாதனையை தற்போது ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

அதேபோன்று, இப்போட்டியின் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அத்துடன், விராட் கோலி தனது 624-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்கார (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் தொடர்ந்து சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், 34,357 ரன்கள் குவித்து, இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
English Summary
Rohit Sharma has broken Chris Gayles record for hitting the most sixes among opening batsmen