02 வருட காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி..! - Seithipunal
Seithipunal


ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குருராஜனின் மகள் நந்தினி. வயது 19. இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கும் இவரது வீட்டின் மேல்மாடியில் வசிக்கும் சரவணன் என்பவருக்கும், இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் கடந்த 02 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவர்களது காதல் விவரம் தந்தை குருராஜனுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் 02 நாட்களுக்கு முன்பு அவர் தனது மகளை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது, காதலை மறந்துவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார். தந்தை தனது காதலை கண்டித்ததால் நந்தினி மனவேதனையுடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலையில் குளித்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு படுக்கை அறைக்குள் சென்ற நந்தினி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குருராஜன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதுள்ளார். அதாவது, மனவேதனையுடன் நந்தினி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர் நந்தினியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர், உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A college student in Erode committed suicide by hanging herself after her father opposed her love affair


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->