மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா; பிரதமர் மோடியுடன் துணை ஜனாதிபதி பங்கேற்பு..!
The Vice President participated with Prime Minister Modi in the Pongal festival celebration at the residence of Union Minister L Murugan
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், ஆண்டுதோறும் பொங்கல் விழாவைத் தமிழர்களின் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி வருகிறார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த விழாவில், முக்கியத் தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கமாகவுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் பிரதமருடன் இணைந்து துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 14-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ள இந்தப் பொங்கல் விழாவிற்காக, மத்திய இணையமைச்சர் எல். முருகனின் இல்லம் கரும்பு, மஞ்சள், வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுத் தமிழகக் கிராமிய மணம் கமழும் வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

குறித்த பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பங்கேற்று, மண்பானையில் பொங்கலிடும் நிகழ்வைப் பார்வையிடவுள்ளார்.
அவருடன் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கியப் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் போது தமிழர்களின் வீரக் கலைகளான சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
The Vice President participated with Prime Minister Modi in the Pongal festival celebration at the residence of Union Minister L Murugan