சாதி, மத மற்றவர் என்ற சான்றிதழ் பெற்றுள்ள நடிகர் பார்த்திபன்..!
Actor Parthiban receives a certificate declaring him to be without caste or religion
நடிகர் பார்த்திபன் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவர் என்ற சான்றிதழை உத்தியோகபூர்மாக பெற்றுள்ளார். இந்த சான்றிதழை சோழிங்கநல்லூர் தாசில்தாரர் சான்று வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
பார்த்தீபன், தனது ஜாதி, மதமற்றவர் என சான்று வழங்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சான்று வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அவருடைய மனுவில், ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி - மதமற்றவர் என சான்று வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி மதம் மற்ற சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
குறித்த உத்தரவின் அடிப்படையில், நடிகர் பார்த்திபனுக்கு, ஜாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழை சோழிங்கநல்லூர் தாசில்தாரர், ஏப்ரல் 27-ஆம் தேதி (நேற்று) வழங்கியுள்ளார். பார்த்திபன் தாக்கல் செய்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது இந்த தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Actor Parthiban receives a certificate declaring him to be without caste or religion