உலக இராணுவச் செலவினம் அதிகரிப்பு; 2.89 ட்ரில்லியன் டாலராக உயர்வு; SIPRI அறிக்கை..! - Seithipunal
Seithipunal


2025-ஆம் ஆண்டில் உலகளாவிய இராணுவச் செலவினம் 2,887 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டைவிட 2.9 சதவீதம் அதிகமாகும். அமெரிக்காவில் இராணுவச் செலவினம் குறைந்த நிலையில், ஐரோப்பாவில் 14 சதவீதமும், ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களில் 8.1 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட புதிய தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவச் செலவினத்தில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை இணைந்து மொத்தம் 1,480 பில்லியன் டாலரைச் செலவிட்டுள்ளன; இது உலகளாவிய மொத்தச் செலவினத்தில் 51 சதவீதமாகும் என கூறப்பட்டுள்ளது. இது உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்துக்கான பங்கு இரண்டரை சதவீதமாக அதிகரித்துள்ளது. 

தரவுகளின் படி, அமெரிக்கா 95,400 கோடி டாலர்களுடன் முதலிடத்தில் நீடித்தாலும் இது செலவினத்தை குறைத்துள்ளது. போர்ச் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாகவே நாடுகள் ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டுவருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SIPRI report states that global military spending has increased


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->