சென்னை பாரிமுனையில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 03 பேர் கைது; உரிமையாளர் தலைமறைவு..! - Seithipunal
Seithipunal


சென்னை பாரிமுனை கடற்கரை 04-வது லைன் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வடக்கு கடற்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாரிமுனையில் அப்துல் ரகுமான் என்பவருக்கு சொந்தமான குடோனில் நின்றுகொண்டிருந்த ஜீப்பை போலீசார் சோதனையிட்டுள்ளனர்.

அதில் 400 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்துள்ளமை  தெரிய வந்தது, அதன்பேரில் ஜீப்பையும், செம்மரக்கட்டைகளையும் போலீசார் அதிரடியாக  பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சிவகங்கையை சேர்ந்த ஆனந்தன் அந்தோணி (29), மண்ணடியை சேர்ந்த செங்கிஸ்கான் (28), முகமது அசார் (30) ஆகிய 03 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த தேனாம்பேட்டை வனத்துறை அதிகாரிகளிடம் 03 பேரையும், 400 கிலோ செம்மரக் கட்டைகள் மற்றும் ஜீப்பை ஒப்படைத்துள்ளனர்.

இதில் தலைமறைவான குடோன் உரிமையாளர் அப்துல் ரகுமானை போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் எங்கிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தார்கள்..? என்றும், கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாரிமுனை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

400 kg of Red Sandalwood Logs Seized and 3 Arrested in Parrys Corner


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->