மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடி வீண்; பஞ்சாபை 06 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்..!
Rajasthan Royals Defeat Punjab by 6 Wickets
ஐபிஎல் 2026 தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை் பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணி, இந்த தொடரில் முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (59) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (29) ஜோடி அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 30 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். வெறும் 22 பந்துகளில் 62 ரன்கள் (04 பவுண்டரிகள், 06 சிக்ஸர்கள்) விளாசினார்.
அதன்படி, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 222 என்ற இலக்கை எட்டியது. ராஜஸ்தான் தரப்பில் யாஷ் புஞ்சா 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பர்கர், ஆச்சர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடியாகி ஆடி அரை சத்தை தவற விட்டார். மறுபுறம் யஷஸ்வி ஜெய்ஷ்வால் 27 பந்துகளில் 51 ரன்கள் குவித்து அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி சார்பில், யுஸ்வேந்திர சஹாலில் சுழலில் 03 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.
ஆனால், அடுத்து வந்த டோனோவன் ஃபெரைரா (52) மற்றும் இம்பாக்ட் பிளேயராக வந்த ஷுபம் துபே (31) ஜோடி அதிரடியாக விளையாடி அணியை தோல்வியின் விளிம்பிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் இணைந்து 19.2 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினர். இறுதியில் ராஜாதான் அணி, 228 ரன்கள் எடுத்து, 06 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 03 வது இடத்தில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகிறது.
English Summary
Rajasthan Royals Defeat Punjab by 6 Wickets